ஜோதிடரின் உரை
நான் தொழில்நுட்பத் துறையில் மிகவும் ஆர்வமாக இருந்த காரணத்தினால் எனது பணியை ஒரு தொழில்நுட்ப இன்ஜினியராகத் தொடங்கினேன். எனது தாத்தாவின் அண்ணன் மிகவும் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர், தொடர்ந்து ஜோதிட சேவை செய்து கொண்டிருந்தார். எனது கோடை விடுமுறையில் நான் என் பெரிய தாத்தா வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அவரை கூர்ந்து கவனிப்பேன். அன்றிலிருந்து எனக்கு ஜோதிடத்தில் கேள்விகள் அதிகம் ஆகியது.
என்று புரியும் வகையில் என் பெரிய தாத்தாவும் ஜோதிட அறிவை என் கேள்விக்கு ஏற்றவாறு பாடம் எடுப்பார். காலப் போக்கில் எனது வாலிப பருவத்தில் என் பெரிய தாத்தா போல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஜோதிடத்தை நான் அவரிடம் கற்றுக்கொண்டு வழி தொடர்ந்து வந்தேன். எனது ஆர்வம் எனது அலுவலர்களிடம் மிகவும் பரிச்சயமானது. அவ்வப்போது அவர்களுக்குத் தேவைப்படும் சிறு சிறு விஷயங்களுக்காக என்னிடம் கேட்பார்கள். நானும் பஞ்சாங்கம் பார்த்து அவர்களிடம் சொல்வேன். எனது நெருங்கிய நண்பர் ஒருவர்…
வெகு நாள் திருமணம் ஆகாது, தொடர்ந்து ஜாதகப் பொருத்தம் இல்லை என்று என்னிடம் நிசப்தம் கூறுவார். அன்றிலிருந்து எனக்கு ஜாதகம் மற்றும் திருமணப் பொருத்தத்தில் ஆர்வம் ஏற்பட்டு இணையதளம் மூலம் படிக்க ஆரம்பித்தேன். எனது தேடலுக்கான பரிசு கிடைக்கவில்லை என் அறி கேள்விக்கான பதிலை பதில் கிடைக்க வேண்டும் என்றால் நான் ஒரு குருவை தேட வேண்டும் என்று முடிவு முடிவிற்கு வந்தேன். பின்னர் பகுதி நேரமாக 10 வருடம் அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் ஜோதிடம் கற்றுக்கொண்டேன்.
ஜோதிடம் கற்றுக்கொண்டாலும் எனது கேள்விக்கான பதிலை எனது குருவிடம் விவாதிப்பேன். பல நூல்கள் ஆராய்ந்து அவர் எனக்கான பதிலை எடுத்துரைப்பார். இப்பொழுது ஜோதிடம் எனது முழு நேரப் பணியாகிவிட்டது. ஜோதிடத்தில் எனக்கு 23 வருட அனுபவமும் கிடைத்துவிட்டது. இன்றும் எனக்கான கேள்வியை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன், பதில் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
இந்த 23 ஆண்டுகளாக ஜாதகம் மற்றும் திருமணப் பொருத்தத்தில் பல்லாயிரக்கணக்கான ஜாதகத்தை ஆராய்ச்சி செய்துள்ளேன். நான் ஒரு திருமணப் பொருத்த specialist.
எனது 23 வருட ஜோதிட அனுபவத்தையும், தொழில்நுட்ப அறிவையும் கொண்டு நான் porutham.net என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளேன்.