நட்சத்திரப் பொருத்தம் (Natchathra porutham) திருமண வாழ்விற்கான முழுமையான வழிகாட்டி.

இன்றைய நாகரிக கலாச்சாரத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையே ஆன திருமண வாழ்க்கை அழகாகவும், மிக நீண்ட கால மகிழ்ச்சியாகவும் அமைவதற்கு அடிப்படை தேவையாக இருப்பது "நட்சத்திரப் பொருத்தம் (Natchathra porutham)" ஆகும். தமிழர்களின் நம்பிக்கை படியும், வேத ஜோதிடத்தின் முக்கியமான வலியுறுத்தலின் படியும் அடிப்படையாக கொண்டு இங்கு பொருத்தம் கணக்கிடப்படுகிறது.

"porutham.net" இணைய தளத்தின் மூலமாக, ஒரு பாரம்பரிய ஜோதிட முறை களுடன் துல்லியமாக கணக்கிட்டு உங்களுக்கான சிறந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் - Natchathra porutham

tamil marriage matching
Groom
மணமகன் (Groom)
Bride
மணமகள் (Bride)

நட்சத்திரப் பொருத்தம் என்றால் என்ன? (What is Natchatra Porutham?)

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, நமது ஜென்ம நட்சத்திரங்கள் மொத்தம் 27 நட்சத்திரங்களாகவும், 108 பாதங்களாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. நமது ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் ராசியே ஒருவரின் நட்சத்திரம் என்று அமைகிறது. இந்த நட்சத்திரம் ஒருவரின் குணம், ஆரோக்கியம் மற்றும் எதிர் காலத்தை தீர்மானிக்கிறது.

திருமணத்தின் போது இருவரது நட்சத்திரத்தின் அதிர்வை (vibrations) ஒன்றுடன் ஒன்று இணை பொருத்திப் பார்த்து ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்வதே நட்சத்திரப் பொருத்தம் ஆகும்.

ஜாதக பொருத்தம் (Jathaga porutham) பார்ப்பதில் பல முறைகள் இருந்தாலும், "10 பொருத்தம் (Dasa porutham)" பார்க்கும் முறையே மிகவும் பிரபலமானது மற்றும் அவசியமானது.

27 நட்சத்திரங்களின் முக்கியத்துவம்

வேத ஜோதிடத்தில் ராசி மண்டலத்தை 12 ராசிகளாகவும், 27 சம நட்சத்திர பாகங்களாக பிரிக்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள் மூன்று கணங்களாக பிரிக்கப்படுகின்றன.

நட்சத்திர கணம்
மானுட கணம்
ராட்சத கணம்

இந்த கணங்களின் சேர்க்கை மிக முக்கியமானது.

திருமணத்திற்கான 10 பொருத்தங்கள்

(Understanding the 10 poruthams)

சிறப்பான திருமண வாழ்க்கை அமைய 10 விதமான பொருத்தங்கள் கணக்கிடப்படுகின்றன. அதன் ஒவ்வொரு முக்கியத்துவத்தையும் கீழே பார்க்கலாம்.

1

தினப் பொருத்தம் (Dina Porutham)

கணவன் மனைவி இருவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. பெரியவர்களின் “நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உறுதிப்படுத்துவது இந்தப் பொருத்தமாகும்.

2

கணப் பொருத்தம் (Gana Porutham)

தம்பதியின் குணாதிசயம் மற்றும் மனம் ஆகியவற்றை ஒப்பிடுவது கணப் பொருத்தம். இருவரின் கருத்து வேறுபாட்டை குறைக்கும் இந்தப் பொருத்தத்தின் ஒற்றுமை.

3

மகேந்திரப் பொருத்தம் (Mahendra Porutham)

வாரிசு யோகம் அல்லது குழந்தைச் செல்வத்தை தீர்மானிப்பது மகேந்திரப் பொருத்தம் ஆகும். வம்ச விருத்திக்கு இந்த பொருத்தம் மிக அவசியம்.

4

ஸ்திரீதீர்க்கப் பொருத்தம் (Stri Deerga Porutham)

இந்த பொருத்தம் இருந்தால் குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும், மற்றும் மணமக்களின் மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பைக் குறிக்கும்.

5

யோனிப் பொருத்தம் (Yoni Porutham)

தம்பதியினரின் உடல் ரீதியான ஒற்றுமையை தீர்மானிப்பது யோனிப் பொருத்தம். தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய உதவுகிறது.

6

ராசிப் பொருத்தம் (Rasi Porutham)

இரு குடும்பத்தின் இடையிலான ஒற்றுமையைக் குறிப்பது ராசிப் பொருத்தம். இது சரியாக இருந்தால் தம்பதியினர் நீண்ட காலம் ஒற்றுமையுடன் வாழ்வர்.

7

ராசி அதிபதி பொருத்தம் (Rasi athipathi Porutham)

ராசி ஜாதகத்தில் ராசி அதிபதிகளுக்கு இடையே நட்பு இருந்தால், கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும்.

8

வசியப் பொருத்தம் (Vasya Porutham)

ஒருவர் மீது மற்றொருவர் எவ்வாறு ஈர்ப்புடன் இருப்பார்கள் என்பது குறிக்கும் பொருத்தம் இது. தம்பதியிடையே எப்போதும் அன்பு நீடிக்க இது அவசியம்.

மிக முக்கியமானது
9

ரஜ்ஜூப் பொருத்தம் (Rajju Porutham)

இது மாங்கல்யப் பொருத்தம் என அழைக்கப்படும். கணவனின் நீண்ட ஆயுளை குறிக்கும் பொருத்தம். உறுதி செய்யும் இந்த ரஜ்ஜூப் பொருத்தம். இது பொருந்தாத பொழுது திருமணம் முடிவு செய்யக்கூடாது.

10

வேதைப் பொருத்தம் (Vedha Porutham)

வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை தவிர்க்கவும், தீய சக்தியின் பார்வையில் இருந்து தம்பதியினரை காக்கவும் வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

பிறந்த தேதியின் அடிப்படையில் நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது ஏன் அவசியம்?(Accuracy: Date of birth vs Name)

இன்று பல காதல் ஜோடிகள் பெயர்களை மற்றும் அடிப்படையாக வைத்து பொருத்தம் (Name porutham) பார்க்கின்றார்கள் ஆனால் அது துல்லியமா என்றால் சந்தேகம் தான்.

"பிறந்த தேதி (Date of birth)", நேரம் மற்றும் இடம் ஆகியவை நிலையானவை, அதன் அடிப்படையில் கணிக்கப்படும் கிரகங்களின் நிலையும் நிலையானவை. எனவே பிறந்த தேதியின் அடிப்படையில் பொருத்தம் பார்ப்பதே "துல்லியமான நட்சத்திரப் பொருத்தம் (Accurate Star Matching)" ஆகும்.

பிறந்த தேதியை வைத்து பார்க்கும் போது:

  • "நட்சத்திர பாதம் (Pada calculation)": உங்களுக்கான நட்சத்திர பாதத்தை கணிக்க முடியும். அதன் அடிப்படையில் தசா புத்தியையும் சரியாக கணக்கிட முடியும்.

💍10-க்கு 6 பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

ஜோதிட ரீதியாக 10-க்கு 6 அல்லது 7 பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் இதில் ரஜ்ஜூ, மகேந்திரம் மற்றும் யோனிப் பொருத்தம் கட்டாயம் இருக்க வேண்டும். சில சமயங்களில் பொருத்தம் சரியாக இருந்தாலும் தோஷங்கள் கணக்கிட வேண்டும்.

நட்சத்திரப் பொருத்தம் பற்றிய கேள்விகள் (FAQ)

நட்சத்திரப் பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் ஒன்றா?
இல்லை, நட்சத்திரப் பொருத்தம் வேறு ஜாதகப் பொருத்தம் வேறு. திருமணப் பொருத்தத்தின் முதல் நிலை இந்த நட்சத்திரப் பொருத்தம். ஆனால் ஜாதகப் பொருத்தம் என்றால் இருவரின் ஜாதகத்தின் கிரக நிலை, தோஷம் மற்றும் தசா புத்திகளின் அடிப்படையில் ஆழமாக கணிக்கப் படும் அறிக்கை.
காதல் திருமணத்திற்கு நட்சத்திரப் பொருத்தம் அவசியமா?
கண்டிப்பாக அவசியம், மன ஏற்றம் இருந்தாலும், இருவரின் தன்னம்பிக்கை அதிகமாக இருந்தாலும், அதை உறுதி செய்வது மிக அவசியம்.